சட்டமன்ற தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் தமிழகத்தில் இயக்கம்!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்!
 

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி உள்ளன. அந்த 234 தொகுதிகளிலும் பல கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் சென்று தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர். தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் கொண்டு செல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத  நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர்.

bus

மேலும் தமிழகத்தில் தேர்தல் தலைமை அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. இந்நிலையில் தமிழகத்தில் வாழும் பல இளைஞர்கள், பொதுமக்கள்  பல்வேறு பகுதிகளில் குடியேறி வேலைப்பார்த்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஆறாம் தேதி ஓட்டு போட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தற்போது தகவல் ஒன்று வெளியானது. அதன்படி தமிழகத்தில் தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்.

 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் 5 வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னையில் தினசரி ஆக 2225 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் நிலையில் ஏப்ரல் 1 முதல் 5  தினங்களில் 3090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தகவல் வெளியானது.மேலும் கோவை, திருப்பூர், சேலம், பெங்களூருவில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 6 மற்றும் 7ல் தினமும்  இயக்கப்படும் 2225 பேருந்துகள் உடன்2115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும்,  சேலம், மதுரை, திருச்சி, தேனியில் இருந்து திருப்பூர், கோவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதாகவும் தகவல். சேலம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்து பெங்களூர் என மொத்தம்1 738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

From around the web