தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன!

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.  இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணி பாஜக பாமக கட்சியையும், எதிர்க்கட்சியான திமுக கட்சி கூட்டணி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியையும் வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

bus

மேலும் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணியும் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் தமிழகத்தில் வாழும் பல்வேறு மக்கள் தங்களது சொந்த ஊரைவிட்டு பல பகுதிகளில் தொழிலுக்காகவும், தங்குவதற்காகவும் சென்றுள்ளனர். இந்நிலையில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை மற்றும் ஜனநாயக கடமை என்பதால் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும். இதற்கு உதவும் விதமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த பேருந்துகள் இன்றைய தினம் முதல் இயக்கப்பட உள்ளன.  இந்நிலையில்  சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்கு 14215 பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளன. மேலும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சென்னையில் 5 மையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த படி கோவை ,திருப்பூர், சேலம், பெங்களூரிலிருந்து  2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற தகவலும் வெளியானது. இதனால் பொதுமக்கள் மிகவும் உற்சாகத்துடன் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க புறப்படுகின்றனர்.

From around the web