ஒருமையில் பேசுவதா? திமுக பொதுச்செயலாளருக்கு கூட்டணி கட்சிகள் கண்டனம்!

 

சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற துரைமுருகன் அவர்கள் நேற்று பேட்டி அளித்த போது தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிலும் செல்லலாம் பிற கட்சிகளும் கூட்டணியில் வந்து இணையலாம் என்று கூறினார் 

மேலும் வேட்புமனுவை திரும்பப் பெற்ற பின்னரே யார் யார் எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்று கூறினார். இந்தப் பேட்டியின் போது அவர் கூட்டணி கட்சியினர் சிலரை திடீரென ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதற்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 

கூட்டணிக் கட்சியினரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒருமையில் பேசியிருப்பது ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார் 

திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான காட்சிகளில் இந்த முறை கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டணிக் கட்சியினரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ஒருமையில் பேசியுள்ளது கூட்டணிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web