2030 இல் விண்வெளியில் ஆய்வு மையம். கே. சிவன் அறிவிப்பு!!

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தற்போது அமெரிக்கா ரஷியா போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையமானது பெங்களூரில் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 50 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைபோட்டு கம்பீரமாக பயணிக்கிறது. இந்த விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு கே. சிவன் தலைவராக உள்ளார். 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு ரஷியாவால் ஏவப்பட்டது. அதன்பின்னர் நாம் இப்போதுவரை பல சாதனைகளை வான்வெளி ரீதியாக
 
2030 இல் விண்வெளியில் ஆய்வு மையம்… கே. சிவன் அறிவிப்பு!!

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தற்போது அமெரிக்கா ரஷியா போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமானது பெங்களூரில் 1969 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 50 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைபோட்டு கம்பீரமாக பயணிக்கிறது.

இந்த விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு கே. சிவன் தலைவராக உள்ளார்.  1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு ரஷியாவால் ஏவப்பட்டது.

அதன்பின்னர் நாம் இப்போதுவரை பல சாதனைகளை வான்வெளி ரீதியாக செய்துவிட்டோம்.

2030 இல் விண்வெளியில் ஆய்வு மையம். கே. சிவன் அறிவிப்பு!!

தற்போது இஸ்ரோவின் தலைவரான கே. சிவன் 2030 ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் வெளிநாட்டு உதவிகள் எதுவும் இல்லாமல் இந்த முயற்சியினை சாத்தியமாக்க முடிவு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விண்வெளி ஆய்வு மையம் 20 டன் எடை கொண்டதாகவும், 15 முதல் 20 நாள்கள் வரை ஆய்வுப் பணிகள் செய்வது போன்றும், 4 முதல் 6 நபர்களை பணி செய்வர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விண்வெளி ஆய்வு மையம் நிச்சயம் இந்தியாவின் வான்வெளி ஆராய்ச்சியினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web