"தென்மேற்கு பருவக்காற்று,வெப்ப சலனம்"- 24 மணி நேரத்திற்கு "தென் தமிழகத்திற்கு" மழை வாய்ப்பு!!

தென்மேற்கு பருவ காற்று வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
rain

இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் எதிர்பாராதவிதமாக வெள்ளப்பெருக்கும் நிகழ்கிறது. தொடர்ச்சியாக நம் தமிழகத்திலும் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் சில முக்கிய அறிவிப்புகளை கூறியது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.rain

மேலும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் திருப்பூர் தென்காசி டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 16,17ஆம் தேதியில் தென்மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

செப்டம்பர் 18, 19ம் தேதியில் மீண்டும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி, கோவை ,கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

From around the web