ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவ மழை: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

 
rain

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மூன்றாம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பது தெரிந்ததே. அதன் காரணமாக தமிழகத்தில் நல்ல மழை பொழிவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று தேசிய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது 

சமீபத்தில் டவுதேவ், யாஷ் புயல் அடித்ததை அடுத்து ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்  திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

மேலும் கேரள மாநிலங்களில் உள்ள அணைகளில் உள்ள நீர் மட்டத்தை பொதுப்பணித் துறையும் மின்சார வாரியமும் கண்காணித்து தயார் நிலையில் இருக்கும் படியும் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகம் வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web