பருவ நிலை மாறுபாட்டால் குறைந்த தென்மேற்குப் பருவமழை!!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை வீசும் பருவ பெயர்ச்சிக் காற்று தென்மேற்கு பருவ பெயர்ச்சிக் காற்று ஆகும். இதன் காரணமாக கேரளாவில் தொடங்கும் பருவமழை, கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு பருவக் காற்றால் தமிழக கடலோரப் பகுதிகள் குறைந்த அளவு மழையை பெறுகின்றன. பருவ நிலை மாறுபாடு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மழையின் அளவு குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை, தற்போது
 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை வீசும் பருவ பெயர்ச்சிக் காற்று தென்மேற்கு பருவ பெயர்ச்சிக் காற்று ஆகும். இதன் காரணமாக கேரளாவில் தொடங்கும் பருவமழை, கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு பருவக் காற்றால் தமிழக கடலோரப் பகுதிகள் குறைந்த அளவு மழையை பெறுகின்றன. 

 பருவ நிலை மாறுபாடு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மழையின் அளவு குறைந்து வருகிறது. 

தென்மேற்கு பருவ மழை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தற்போதைய ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 27% குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. 

பருவ நிலை மாறுபாட்டால் குறைந்த தென்மேற்குப் பருவமழை!!

ஆனால் திருவண்ணாமலையில் 251.1 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 81% அதிகம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 247.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 56% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 73% குறைவான மழைப்பொழிவை தந்துள்ளது. 

கொடைக்கானல் பகுதியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அங்குள்ள அணைகள் வறண்டு காணப்படுகின்றன.
இதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அதேசமயம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை நல்ல மழைப் பொழிவை தந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் நீர் வரத்து அதிகமானது. இதன் காரணமாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை அடைந்ததால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 


From around the web