முன்பதிவு மையங்கள் இயங்காது தெற்கு ரயில்வே!ஆனால் ஆன்லைன் சேவை உண்டு!

ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு  ஊரடங்குபோது டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என திட்டவட்டமாக கூறியுள்ளது தெற்கு ரயில்வே!
 
முன்பதிவு மையங்கள் இயங்காது தெற்கு ரயில்வே!ஆனால் ஆன்லைன் சேவை உண்டு!

இந்தியாவில் தற்போது மூன்று விதமான போக்குவரத்து காணப்படுகிறது. தரைவழி வான்வழி கடல்வழி. இதில் தரைவழியானது மாவட்டங்களுக்கு இடையே குறிப்பாக சிறுசிறு ஊர்களுக்கு இடையே அதிகம் பயன்படுகிறது. மேலும் நேரத்தை குறைக்கும் பணத்தை மிச்சப்படுத்தவும் உருவாக்கப்பட்டது ரயில்வே. தெற்கு ரயில்வே போக்குவரத்து சில தினங்களுக்கு முன்பு பல்வேறு அறிவுரைகளை வழங்கியது. அதன்படி பயணிகளுக்கு காய்ச்சலும் சளியும் இருமலும் இருந்தால் பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்திருந்தது.train

மேலும் பயணிகள் கூட்டமாகவும் தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தது. தெற்கு ரயில்வே சார்பில் சில தினங்கள் முன்பாக கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு தேவையான ரயில் பெட்டிகள் வழங்க இருப்பதாகவும் அவை தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் பயணிகள் ரயில்களிலும் சுத்தத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்திய நிலையில் தற்போது சில முக்கிய தகவல்களை அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என்று கூறியுள்ளது.

காரணம் என்னவெனில் தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக உதவும் வண்ணமாக தெற்கு ரயில்வே தற்போது ஞாயிற்றுக்கிழமையில் இயங்க உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களை இயங்காது என்று கூறியுள்ளது. ஆனால் பயணிகள் உதவும் வண்ணமாக  பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யலாம் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் எப்போது போதும் செயல்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரசின்  சார்பில் இந்த கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றி வருவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

From around the web