தென் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி !6 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தென் கடலோர பகுதிகளில் ஒரு ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி அதனால் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
 
தென் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி !6 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது மே மாதம்தான். ஆனால் மே மாதம் தொடங்காது நிலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனது தற்போது மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று கூறியுள்ளது.

அது என்னவெனில் தென் கடலோரப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் சுழற்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும் ஒரு குறிப்பிட்ட 6 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அந்த மாவட்டங்களில் கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி கோவை நீலகிரி தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

weather

மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறியது. இதனால் வட தமிழகத்தில் உள்ள மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். மேலும் கோடை காலம் நெருங்குவதால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சென்னை மற்றும் இதர மாவட்ட மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

From around the web