இது உங்களுக்கு நேர்ந்ததற்கு மன்னிக்கவும் சகோதரி: சித்தார்த் டுவீட்

 

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திவரும் இந்த போராட்டம் சமீபத்தில் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்பவர்களும் கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி என்ற மாணவி தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவு செய்ததற்கு திடீரென கைது செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

disha ravi

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் திஷா ரவி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக திஷா ரவியை கைது செய்திருப்பது ஜனநாயகம் அல்ல என கனிமொழி எம்பி குறிப்பிட்டுள்ளார் 

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமான சமூக கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் திஷா ரவியின் கைதுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திஷா ரவிக்கு என் ஆதரவு உண்டு. இது உங்களுக்கு நேர்ந்ததற்கு மன்னிக்கவும் சகோதரி. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். வலுவாக இருங்கள். இந்த அநீதியும் கடந்து போகும்’ என்று அவர் பதிவு செய்துள்ளார் நடிகர் சித்தார்த்தின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

From around the web