திடீரென அனாதையான மூன்று குழந்தைகள்: நான் இருக்கின்றேன் என கைகொடுத்த சோனு சூட்

மூன்று குழந்தைகள் திடீரென அனாதையாக நின்ற போது அவரக்ளின் பெரிய பையன் மற்ற 2 குழந்தைகளையும் கவனித்து வருகிறார் என்பது குறித்த செய்தி தொகுப்பு ஒன்று ஆந்திராவில் உள்ள தெலுங்கு சேனல் ஒன்றில் வெளிவந்தது அதில் பெரிய பையன் தனது தம்பி மற்றும் தங்கைக்கும் சாப்பாடு செய்து கொடுப்பதும் தங்கைக்கு தலைசீவி விடுவதுமான காட்சிகள் இருந்தன மேலும் தம்பி தங்கைகளை கவனித்துக் கொண்டே அந்த பெரிய பெரிய பையனும் படித்துக்கொண்டிருக்கும் காட்சிகளும் அதில் இருந்தன தந்தை தாய்
 

திடீரென அனாதையான மூன்று குழந்தைகள்: நான் இருக்கின்றேன் என கைகொடுத்த சோனு சூட்

மூன்று குழந்தைகள் திடீரென அனாதையாக நின்ற போது அவரக்ளின் பெரிய பையன் மற்ற 2 குழந்தைகளையும் கவனித்து வருகிறார் என்பது குறித்த செய்தி தொகுப்பு ஒன்று ஆந்திராவில் உள்ள தெலுங்கு சேனல் ஒன்றில் வெளிவந்தது

அதில் பெரிய பையன் தனது தம்பி மற்றும் தங்கைக்கும் சாப்பாடு செய்து கொடுப்பதும் தங்கைக்கு தலைசீவி விடுவதுமான காட்சிகள் இருந்தன

மேலும் தம்பி தங்கைகளை கவனித்துக் கொண்டே அந்த பெரிய பெரிய பையனும் படித்துக்கொண்டிருக்கும் காட்சிகளும் அதில் இருந்தன

தந்தை தாய் திடீரென மரணம் அடைந்து யாரும் இல்லாத நிலையிலும் மூத்த பையன் மற்ற 2 குழந்தைகளையும் கவனித்து வருவதை பலரும் பாராட்டி வந்தனர். இருப்பினும் அந்த மூன்று குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன

வழக்கம்போல் இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் சோனு சூட் அந்த மூன்று குழந்தைகளும் இனிமேல் அனாதை இல்லை அவர்கள் மூவரும் என்னுடைய குழந்தைகள் என்று கூறி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்

ஏற்கனவே பல உதவிகள் செய்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று வரும் சோனு சூட் தற்போது மேலும் ஒரு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web