சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசிரியை ஆகிறார் மூதாட்டி: நடிகரின் புதிய முயற்சி

கடந்த சில நாட்களாக அனைத்து இணைய தளங்களிலும் 70 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பம் விளையாட்டு ஆடும் வீடியோ ஒன்று வைரல் ஆனது என்பது தெரிந்ததே இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் அவருடைய தகவல்களைத் திரட்டி அவர் சிறுவயதில் வருகின்றனர் இந்த நிலையில் அந்த மூதாட்டி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சிறு வயதிலிருந்தே சிலம்பத்தை முறையாக கற்று பலருக்கும் பயிற்றுவித்து வருகிறார்
 

சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசிரியை ஆகிறார் மூதாட்டி: நடிகரின் புதிய முயற்சி

கடந்த சில நாட்களாக அனைத்து இணைய தளங்களிலும் 70 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பம் விளையாட்டு ஆடும் வீடியோ ஒன்று வைரல் ஆனது என்பது தெரிந்ததே

இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் அவருடைய தகவல்களைத் திரட்டி அவர் சிறுவயதில் வருகின்றனர்

இந்த நிலையில் அந்த மூதாட்டி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சிறு வயதிலிருந்தே சிலம்பத்தை முறையாக கற்று பலருக்கும் பயிற்றுவித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது

மேலும் தனது தந்தை தனக்கு எந்த வயதாக இருந்தாலும் உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் தற்போது சிலம்பம் வித்தையை காண்பித்து அதில் கிடைக்கும் வருவாயில் தான் தனது தேவையை பூர்த்தி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்

இந்த மூதாட்டியின் சிலம்பம் வித்தை மற்றும் பேட்டியை பார்த்த நடிகர் சோனு சூட் அவரை தொடர்பு கொண்டு தான் ஆரம்பிக்க இருக்கும் சிலம்ப பயிற்சி பள்ளிக்கு அவரை ஆசிரியையாக நியமனம் செய்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

மேலும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும் செய்ய உறுதி செய்து உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஒரே ஒரு வீடியோ வைரல் ஆனதால் அந்த மூதாட்டி தற்போது சிலம்பு பயிற்சி பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூலம் ஏராளமான பெண்கள் இந்த தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web