சோனுசூட் மீது புகார்: 6 மாடி கட்டிடம் இடிக்கப்படுமா?

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலம் செல்வதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தவர் நடிகர் சோனு சூட் திரையில் அவர் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்வில் அவர் சூப்பர் ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்தார். அவருக்கு தெலுங்கானா மாநிலத்தில் கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி தினந்தோறும் அவர் யாருக்காவது உதவி செய்து கொண்டிருக்கும் தகவல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கூட அவர் ’ஆச்சாரியா’ திரைப்படத்தில் பணிபுரிந்த 100 பேர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தார் என்ற தகவல் வந்தது
இந்த நிலையில் சோனு சூட் அவர்களுக்கு சொந்தமான மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள ஆறு மாடி குடியிருப்பு கட்டடத்தை அதிகாரிகளின் அனுமதி இன்றி அவர் ஹோட்டலாக மாற்றியதாக கூறப்படுகிறது
இது குறித்து நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து அவருக்கு சொந்தமான 6 மாடி கட்டடம் இடிக்கப்படுமா? என்ற பரபரப்பு தற்போது பாலிவுட் திரையுலகில் ஏற்பட்டுள்ளது
மக்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை அதிகமாவதை பொறுக்க முடியாமல் ஒருசில அரசியல்வாதிகளின் நெருக்கடியால் தான் சோனு சூட் அவர்களுக்கு நெருக்கடி தரப்படுவதாக கூறப்படுகிறது