அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் சோனியாகாந்தி!

 

அமெரிக்காவுக்கு சிகிச்சை செய்வதற்காக சென்று இருந்த காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தற்போது நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் திடீரென காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவுக்கு சென்றார். அவர் உடல்நிலை பரிசோதனை செய்வதற்கும் சிகிச்சைக்காகவும் அமெரிக்கா செல்வதாக கூறப்பட்டது

சோனியா காந்தியுடன் அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ராகுல் காந்தியும் சென்றார் என்பதால் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவருமே மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதாக்கள் உள்பட பல்வேறு மசோதாக்கள் அமல்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவருமே பாராளுமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சோனியா காந்தி மற்றும் அவருடன் சென்றிருந்த ராகுல் காந்தி ஆகியோர் நாடு திரும்பி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது

இதனை அடுத்து மீதி உள்ள கூட்டத்தொடரில் ராகுல் காந்தி கலந்து கொள்வாரா? அவருடன் சோனியா காந்தியும் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web