எப்படியோ ஒரு வழியா முடிவுக்கு கொண்டுவரப்பட்டது கொரோனா வைரஸ்!

தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்!
 
corona

தற்போது ஆட்கொல்லி நோயாக அதிகம் பேசப்படுகிறது கொரோனாவைரஸ். கொரோனாவைரஸ்  நம் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் இந்நோயின் தாக்கம் அதிகரிக்க வந்தது. அதுவும் குறிப்பாக மார்ச் மாதத்தில் இந்நோயின் தாக்கம் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகமாக காணப்பட்டது மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்கியது. மேலும் பல மாநிலங்களில் இதற்கு எதிராக பல்வேறு உத்தரவுகள், கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.thanjavur

ஆயினும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா தாக்கமானது சில தினங்களாக அதிகமாக காணப்படுவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்நோயின் தாக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காணப்படும் தஞ்சையில் இந்நோயின் தாக்கம் கட்டுப்படுத்தபட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் போதுமான அளவிற்கு ஆக்சிசன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உள்ளதா என ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் அவர் அது பற்றி சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி மாவட்டத்தில் இன்னும் 1250 ஆக்சிசன் வசதிகளுடன்கூடிய படுக்கைகள் கையிருப்பில் உள்ளதாக கூறினார்.

மேலும் அவர் 50 % படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அவர் கூறினார். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 300 முதல் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் இதனால் கடந்த 3 நாட்களில் தஞ்சாவூரில் கொரோனாவின் பாதிப்பு குறைவாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கூறியுள்ளார்.

From around the web