2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் 11 மணிக்கு தொடங்கி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் தற்போது வரை அறிவிக்கப்பட்டவை: * கழிவு சுத்திகரிப்பிற்காக ரோபோட்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். * கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும். * நாடு முழுவதும் 95% நகரங்கள் திறந்தவெளி கழிவறைகள் இல்லாத நகரங்களாக மாறியுள்ளன. இது நம் நாட்டினைப் பற்றி
 
2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் 11 மணிக்கு தொடங்கி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் தற்போது வரை அறிவிக்கப்பட்டவை:

* கழிவு சுத்திகரிப்பிற்காக ரோபோட்கள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 


* கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும்.

* நாடு முழுவதும் 95% நகரங்கள் திறந்தவெளி கழிவறைகள் இல்லாத நகரங்களாக மாறியுள்ளன. இது நம் நாட்டினைப் பற்றி பெருமைப்பட விஷயமாகும், மேலும் இது 100 மாறும் என்று உறுதியளிக்கிறோம்.

* என்சைக்ளோபீடியா போன்று காந்திபீடியா உருவாக்கப்படும். இதன் மூலம் காந்தியக் கொள்கைகள் இளைஞர்களிடம் பரப்பப்படும். 

2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்

* உலகின் மிகச்சிறந்த கல்வி முறையாக நமது புதிய கல்விக் கொள்கை இருக்கும். 

* விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 10,000 புதிய அமைப்புகள் உருவாக்கப்படும். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. 

* தூய்மை இந்தியா திட்டத்திற்கான செயலியை ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

* வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க “ஹர் கர் ஜல்” திட்டம் கொண்டு வரப்படும் 

* ஓய்வூதிய திட்டம் 3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். 

From around the web