அல்வாவுக்கு பேர் போன ஊர் கூறும் சில தகவல்!பயணிகள் மகிழ்ச்சி!

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் ஆனது இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது!
 
அல்வாவுக்கு பேர் போன ஊர் கூறும் சில தகவல்!பயணிகள் மகிழ்ச்சி!

மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு கண்ணுக்கே தெரியாமல் வலம் வந்து கொண்டுள்ளது கொரோனா. இந்தியாவில் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. இந்தியாவில் ஆனால் இறுதியில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது.மேலும் இந்த கொரோனா நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து மக்களை சோகத்தில் தள்ளியுள்ளது. குறிப்பாக இந்த கொரோனா தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இது போன்று திண்டுக்கல் மதுரை போன்ற மாவட்டங்களிலும் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

bus

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மதசார் ஊர்வலங்கள் கோவில் திருவிழாவிற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளன. இதற்காக வெளியூர் வாசிகள் இரவுநேர பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து சில தகவல்கள் வெளியாகின்றன.

காலையில் சென்னை ஆனது சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக கூறியிருந்தது. அதை தொடர்ந்து சேலத்திலும் பேருந்துகள் போகும் நேரத்தினையும் அறிவித்திருந்த நிலையில், தற்போது தாமிரபரணி பாயும் நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நெல்லையில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை இயக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் நெல்லையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தற்போது நெல்லை போக்குவரத்து கழகம் ஆனது இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

From around the web