சென்னை, திருச்சியில் தெரிய தொடங்கியது சூரிய கிரகணம்!

கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் என கூறப்படும் அரியவகை சூரிய கிரகரணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்குகிறது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த சூரிய கிரகணம் பகல் 12.10 உச்சத்தை அடைகிறது என்றும் இந்த கிரகணம் பிற்பகல் 2.30 மணிக்கு முடிகிறது என்றும் வானியல் நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்றைய சூரிய கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் முழுமையாக
 
சென்னை, திருச்சியில் தெரிய தொடங்கியது சூரிய கிரகணம்!

கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் என கூறப்படும் அரியவகை சூரிய கிரகரணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்குகிறது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த சூரிய கிரகணம் பகல் 12.10 உச்சத்தை அடைகிறது என்றும் இந்த கிரகணம் பிற்பகல் 2.30 மணிக்கு முடிகிறது என்றும் வானியல் நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய சூரிய கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் முழுமையாக காணலாம் என்றும் சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் பகுதியாக பார்க்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் பகுதியாக சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை சென்னை, திருச்சியை சேர்ந்த பலர் பாதுகாப்பு கண்ணாடி அணிந்து பார்த்து மகிழ்ந்தனர். சூரிய கிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருச்சியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்ததை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web