சிகிச்சை பலனின்றி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டிராபிக் ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்!
 
traffic ramasamy

தற்போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை நாடெங்கும் நிலவுகிறது. மேலும் பல பகுதிகளில் ஊழல் என்ற பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. மேலும் குறிப்பாக தமிழகத்தில் சில பொருள்கள் வாங்குவதற்கும் சில சான்றிதழ் வாங்குவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சில நாட்களுக்கு முன்பாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் உள்ள இலவச சேவைகளை பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.traffiv ramasamy

மேலும் அவ்வப்போது இந்த ஊழலுக்கு எதிரான பிரச்சனைகளும் தமிழகத்தில் நடைபெறும். மேலும் இதற்கு எதிராக பலரும் போராடுவார். மேலும் இதற்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி இருந்தவர் டிராபிக் ராமசாமி. மேலும் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து தொடுத்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதில் போலீசாருக்கு உதவியதால் டிராபிக் ராமசாமி என்ற அடைமொழியை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் சாலையோரம் வைக்கப்படும் பேனர் பிளக்ஸ்களுக்கு எதிராக தொடர்ந்து வழக்குகளை தொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சமூக ஆர்வலராக இருந்த டிராபிக் ராமசாமி தற்போது காலமானார் என்ற தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. அதன்படி இவர் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இவருக்கு 87 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் உடல்நலக்குறைவால் பத்து நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் காலமானார். மேலும் இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தளபதி விஜயின் அப்பா சந்திரசேகர் டிராபிக் ராமசாமி என்ற படத்தையும் இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web