இதுவரை தவறு ஏதும் நடக்கவில்லை,அப்படி புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை- சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்!
 
இதுவரை தவறு ஏதும் நடக்கவில்லை,அப்படி புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை- சத்யபிரதா சாகு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது முன்னர் தேதிவரை வைத்திருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் புதிய கூட்டணி கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் களமிறங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகவாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று தமது ஜனநாயக கடமையாற்றினார்.வாக்காளர்களுக்கு உதவும் வண்ணமாக அவர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் போன்றவைகள் வழங்கப்பட்டன.

vote

மேலும் தமிழகத்தில் வாக்கு பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர் அனைவரின் உடல் வெப்ப நிலையும் கணக்கிடப்பட்டு அதன் பின்னர் அதிகாரிகள் அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர்.  தமிழகத்தில் தற்போது வாக்கு பதிவானது நடைபெற்று முடிந்தது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு காவல்துறை கண்காணிப் பில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.

இது குறித்து தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரதா சாகு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் காவல்துறை கண்காணிப்பில் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறினார் .தவறு எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் அவர் கூறினார் அப்படி புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

From around the web