தமிழகத்தில் இதுவரை 4786 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்!

4018 பேர் ஆண்கள் 776 பேர் பெண்கள் இரண்டு திருநங்கைகள் உட்பட 4786 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்!
 
தமிழகத்தில் இதுவரை 4786 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளது.  ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக ஆளும் கட்சியான பாஜக கட்சி வைத்துள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது.

election

தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தது. அதன்படி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வேட்புமனுவைதாக்கல் செய்ய காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ,வேட்பு மனுவை தாக்கல் செய்ய வருபவர் இரண்டு பேருக்கு மேல் தாக்கல் செய்ய வரக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி நிறைவு பெற்றது. இன்றுடன் தமிழகத்தில் 4786 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதில்  4018 பேர் ஆண்கள் எனவும் 776 பேர் பெண்கள் எனவும் இரண்டு திருநங்கைகள் எனவும் தகவல் வெளியானது .மேலும் தமிழகத்தில் தலைநகரமாக உள்ள சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்றும் கூறப்படுகிறது அந்த 405 பேரில் 338பேர் ஆண்களும் 66 பேர் பெண்களும் ஒரு திருநங்கையும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

From around the web