இதுவரை இந்தியாவில் "36.48 கோடி டோஸ்" கொரோனா தடுப்பூசி;

இதுவரை இந்தியாவில் 36.48 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
 
corona

தற்போது இந்தியாவில் சில தினங்களாக மக்கள் ஓரளவு சந்தோசத்தில் காணப்படுகின்றனர். காரணம் என்னவென்றால் இந்தியாவில் சில நாட்களாக கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கிருமிகளின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். மேலும் பலரின் வேலைவாய்ப்பும் இன்றி தவித்தனர். இத்தகைய சூழலில் பல மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தினார். அதன் விளைவாக கொரோனா தாக்கமானது தற்போது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது.government

இதனால் இந்திய மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புகின்றனர்.  பல மாநிலங்களில் தடுப்பூசிகளின் செலுத்துவோர் எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசானது சில அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் இதுவரை  36.48 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

மேலும் இந்தியாவில் ஒரே நாளில் 33 லட்சத்து 81 ஆயிரத்து 671 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல், மேலும் தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 60 லட்சத்து 94 ஆயிரத்து 597 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் தடுப்பூசிகளின் நம்பிக்கையும் அதிகரித்ததோடு மட்டுமன்றி தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web