ஜீன்ஸ் பேண்டுக்குள் நுழைந்த பாம்பு… 7 மணிநேரம் அசையாமல் நின்ற வாலிபர்!

உத்தரப்பிரதே மாநிலத்தில் வாலிபர் ஒருவர் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவருடைய ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு நுழைந்ததால் அந்த வாலிபர் 7 மணி நேரம் தூண் ஒன்றை பிடித்து நின்று கொண்டே இருந்த வீடியோ வைரலாகி வருகிறது உத்திரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் உள்ள சிக்கந்தர்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லவ்கேஷ்குமார் என்ற வாலிபர் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை நிறுவுவதற்கான வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துக் கொண்டு சக தொழிலாளர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
 

ஜீன்ஸ் பேண்டுக்குள் நுழைந்த பாம்பு… 7 மணிநேரம் அசையாமல் நின்ற வாலிபர்!

உத்தரப்பிரதே மாநிலத்தில் வாலிபர் ஒருவர் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவருடைய ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு நுழைந்ததால் அந்த வாலிபர் 7 மணி நேரம் தூண் ஒன்றை பிடித்து நின்று கொண்டே இருந்த வீடியோ வைரலாகி வருகிறது

உத்திரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் உள்ள சிக்கந்தர்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லவ்கேஷ்குமார் என்ற வாலிபர் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை நிறுவுவதற்கான வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துக் கொண்டு சக தொழிலாளர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஜீன்ஸ் பேண்ட்டுக்குள் ஒரு நாகப்பாம்பு புகுந்துவிட்டது.

தனது ஜீன்ஸ் பேண்டுக்குள் ஏதோ ஊர்வதை அறிந்த வாலிபர் உடனடியாக தனது பேண்டை பாதியளவு கழற்றிவிட்டு பார்த்தபோது பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அசைந்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆடாமல் அசையாமல் அங்கே இருந்த தூணை பிடித்தபடி நின்றிருந்தார். இதையறிந்த சக ஊழியர்கள் உடனடியாக கிராமத்தினர் உதவியுடன் பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்தனர்.

பாம்பு பிடிப்பவர் வாலிபரின் ஜீன்ஸ் பேண்ட்டின் கால்பகுதியில் இருந்த பாம்பை பிடிக்க பேண்டின் ஒரு பகுதியை வெட்டி பாம்பு வெளியே வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த பாம்பு பேண்டின் அடுத்த கால்பகுதிக்குள் சென்றுவிட்டதால் சுமார் 7 மணிநேர காத்திருந்து அதன் பின்னர் பாம்பு வந்தபோது அதனை பிடித்தார். இந்த 7 மணி நேரமும் அந்த வாலிபர் தூணை பிடித்தபடியே நின்றிருந்தா என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

From around the web