மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்; பெண்களுக்கு தையல் மிஷின்!!

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்!
 
gopalapuram

தற்போது நம் தமிழகத்தில் இன்றைய தினம் திமுக மக்களிடையே மிகவும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் என்னவெனில் திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. அதனால் திமுக கட்சியினர் பலரும் மிகவும் சிறப்பாக அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த முறையில் மக்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் கொண்டாடப் படும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.stalin

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவரது தந்தையான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தி அதன் பின்னர் மிக உருக்கமான பதிவுகளை வெளியிட்டார், மேலும் வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.  கவிஞர் வைரமுத்துவும் அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக கூறுகிறது.

அதன்படி கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பெண்களுக்கு  தையல் இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்குகிறார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.கலைஞரின் பிறந்த நாளை ஒட்டி தமிழக அரசின் சார்பில் புதிதாக ஐந்து திட்டங்கள் தொடங்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.இதனால் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களும் நிவாரண தொகைகள் வழங்கப்பட்டு வருவது நம் கண்முன்னே தெரிகிறது.

From around the web