இன்று முதல் கோவில்கள் திறப்பு: அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஏழு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த ஊரடங்கில் ஒரு சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாநகராட்சி
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஏழு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த ஊரடங்கில் ஒரு சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சிறிய கோவில்கள் மற்றும் மசூதிகள் சர்ச்சுகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறினார்

இதனையடுத்து இன்று அதிகாலையிலேயே கோவில் முன் பக்தர்கள் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை கோவில் திறந்தவுடன் பக்தர்கள் பயபக்தியுடன் சென்று கோவிலில் தரிசனம் செய்தனர்

முதல் கட்டமாக சிறிய கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் இதன் பின்னர் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய கோவில்களும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிகிறது

140 நாட்களுக்கு பின்னர் தற்போதுதான் கோவில் திறக்கப்பட்டு உள்ளது என்பதால் மனம் திருப்தியாக இருப்பதாக கோயிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர். முன்னதாக கோவில்கள் இன்று திறக்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக நேற்றே அனைத்து கோவில்களும் தூய்மைப்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது

From around the web