கோழிக்கோடு விமான விபத்தா? படுகொலையா? அதிர்ச்சித் தகவல்கள்

கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ரன்வேயில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விமான நிலையம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி உள்ளது இந்த விமான நிலையத்தில் டேபிள் டாப் ரன்வே என்று கூறப்படும் ரன்வே தான் உள்ளது என்றும் இந்த ரன்வே மிகவும் சிறியது என்பதால் பெரிய விமானங்கள் தரையிறங்கும் போது கடும் சிரமமாக இருக்கும் என்று
 

கோழிக்கோடு விமான விபத்தா? படுகொலையா? அதிர்ச்சித் தகவல்கள்

கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ரன்வேயில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 19 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விமான நிலையம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி உள்ளது

இந்த விமான நிலையத்தில் டேபிள் டாப் ரன்வே என்று கூறப்படும் ரன்வே தான் உள்ளது என்றும் இந்த ரன்வே மிகவும் சிறியது என்பதால் பெரிய விமானங்கள் தரையிறங்கும் போது கடும் சிரமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

நேற்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் இரண்டு முறை தரையிறக்க முயற்சி செய்து, முடியாமல் பின்னர் மூன்றாவது முறை தான் தரை இறங்கியதாகவும், கடுமையான மழை காரணமாக ரன்வே பகுதியில் ஈரப்பதமாக இருந்ததால் விமானி விமானத்தை தரையிறக்கும் போது சறுக்கிக் கொண்டு அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து போனதாகவும் கூறப்பட்டு வருகின்றன

கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்குவது ஆபத்து என்று பல சர்வதேச விமானங்கள் கோழிக்கோட்டில் விமானங்களை தரையிறக்குவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டன என்றும் கூறப்படுகிறது

இது குறித்து முன்னாள் விமான பாதுகாப்பு கேப்டன் ஒருவர் கூறும்போது ஒன்பது வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட அறிக்கையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு பாதுகாப்பான கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இது விபத்து இல்லை என்றும் படுகொலை என்றும் இத்தகைய விமான நிலையத்தை அனுமதிப்பது தவறு என்றும் அவர் கோரியுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இதனை கடுமையாக மறுக்கிறார். கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க போதுமான இடம் இருக்கின்றது என்றும் ரன்வே ஓடுதளம் குறைவானது என்று கூற முடியாது என்றும் மோசமான வானிலை காரணமாக ரன்வேயில் தண்ணீர் இருந்த காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்

From around the web