கனிமொழி இந்தி மொழிபெயர்ப்பு குறித்து நடிகர் சிவகுமார் கூறிய திடுக் தகவல்

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் ஊழியர்கள் தன்னை இந்தியரா? எனக் கேட்டதாக கனிமொழி டுவிட் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் ’கடந்த 1989 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் விபி சிங் ஹிந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தவர் கனிமொழிதான் என்றும் எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று கூறுவது பொய்யானது என்றும் தெரிவித்திருந்தார் இதனை அடுத்து முன்னணி ஊடகமொன்று இது குறித்து ஆய்வு செய்தது. எச்.ராஜா
 

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் ஊழியர்கள் தன்னை இந்தியரா? எனக் கேட்டதாக கனிமொழி டுவிட் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் ’கடந்த 1989 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் விபி சிங் ஹிந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தவர் கனிமொழிதான் என்றும் எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று கூறுவது பொய்யானது என்றும் தெரிவித்திருந்தார்

இதனை அடுத்து முன்னணி ஊடகமொன்று இது குறித்து ஆய்வு செய்தது. எச்.ராஜா வெளியிட்ட புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தபோது அந்த புகைப்படம் நடிகர் சிவக்குமார் வீட்டிற்கு கனிமொழியும் மு கருணாநிதி அவர்களும் சென்ற போது எடுத்தது என்பது உறுதிசெய்யப்பட்டது

இதுகுறித்து சிவக்குமார் கூறியபோது ’கடந்த 1989ஆம் ஆண்டு கருணாநிதியின் கதை வசனத்தில் பாடாத தேனீக்கள் என்ற திரைப்படத்தில் தான் நடித்ததாகவும், அந்த படத்தை பாராட்டிய கருணாநிதி அவர்கள் தன்னுடைய மகளுடன் தனது வீட்டிற்கு வந்து தனது ஓவியங்களை பார்த்ததாகவும் கூறினார்

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் எச்.பேச்சை ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்த புகைப்படம் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த தனது சந்திப்பை முடித்துவிட்டு தான் விபிசிங் கூட்டத்திற்கு கருணாநிதியும் கனிமொழியும் சென்றனர் என்றும் சிவகுமார் விளக்கியுள்ளார்

கனிமொழி இந்தி மொழிபெயர்ப்பு குறித்து நடிகர் சிவகுமார் கூறிய திடுக் தகவல்

From around the web