சிவகங்கை மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதி வேட்பாளர்கள் முழு கவச உடை அணிந்து வாக்களித்தார்கள்!

சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர்கள் முழு கவச உடை அணிந்து வாக்களித்தார்கள்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது இன்றைய தினம் நடைபெற்றது. தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நடைபெற்றது. இந்த வாக்கு பதிவானது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவானது இன்றைய தினம் நடைபெற்றது. மேலும் இதற்காக பொதுமக்கள் காலையிலேயே சென்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

corona

மேலும் அவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து வாக்கினை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு சனிடைசர், முகக்கவசம், கையுறை போன்றவைகள் வழங்கப்பட்டது.  அவர்களின் உடல் வெப்பநிலையானது பரிசோதிக்கப்பட்டு அவர்களின் வாக்களிக்க அனுமதி செய்தனர்.  மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் சீல் வைக்கும் பணியானது தற்போது தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில்  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க உதவும் வண்ணமாக 6 முதல் 7 மணி வரை கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது இதில் திமுக எம்பி கனிமொழி தனது வாக்குப்பதிவை பதிவிட்டார். மேலும் இது தொடர்ந்து சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் முழு கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காரைக்கால் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அசனாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் வெளியானது. அவரும் தற்போது முழு கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web