அரியலூரில் குளத்தில் மூழ்கி உயிர் இழந்த அக்கா- தம்பி!!

அரியலூர் மாவட்டத்தில் குளத்திற்கு குளிக்கச் சென்ற அக்கா- தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி உயிர் இழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியலூர் மாவட்ட்த்தில் உள்ள பொன்குடிக்காட்டில் உள்ள குமார்- ஐஸ்வர்யா ஆகியோருக்கு 10 வயதில் பிருந்தா என்ற மகளும், 8 வயதில் கிரிதரன் என்ற மகனும் இருந்துள்ளனர். தற்போது விடுமுறை என்பதால், வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், விளையாடி முடித்த பின்னர் குளத்திற்குக் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தில் ஆழமாக ஒரு பள்ளம் வெட்டப்பட்டு இருந்தது தெரியாமல் இருந்த நிலையில்
 
அரியலூரில் குளத்தில் மூழ்கி உயிர் இழந்த அக்கா- தம்பி!!

அரியலூர் மாவட்டத்தில் குளத்திற்கு குளிக்கச் சென்ற அக்கா- தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி உயிர் இழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியலூர் மாவட்ட்த்தில்  உள்ள பொன்குடிக்காட்டில் உள்ள குமார்- ஐஸ்வர்யா ஆகியோருக்கு 10 வயதில் பிருந்தா என்ற மகளும், 8 வயதில் கிரிதரன் என்ற மகனும் இருந்துள்ளனர்.

தற்போது விடுமுறை என்பதால், வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், விளையாடி முடித்த பின்னர் குளத்திற்குக் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தில் ஆழமாக ஒரு பள்ளம் வெட்டப்பட்டு இருந்தது தெரியாமல் இருந்த நிலையில் இவர்கள் குளித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அரியலூரில் குளத்தில் மூழ்கி உயிர் இழந்த அக்கா- தம்பி!!

அப்போது கிரிதரன் பள்ளத்தில் வழுக்கி விழுந்து தத்தளிக்கையில், சிறுமி பிருந்தா எப்படியாவது தம்பியை காப்பாற்ற முயற்சி செய்த நிலையில் அவரும் பள்ளத்தில் விழுந்துவிட்டார்.

அந்த வழியாக பஸ்ஸில் சென்ற அரசு பஸ் டிரைவர், வண்டியினை ஓரம் கட்டிவிட்டு அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து குழந்தைகளை பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளார்.

விரைந்து பொன்பரப்பி அரசு சுகாதார நிலையத்திற்குப் போக, அங்கு மருத்துவர் இல்லாததால் செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இருப்பினும் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

From around the web