சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கு: நீதிமன்றத்தில் நிபுணர் குழு முக்கிய தகவல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகை சித்ரா ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நிபுணர்குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இதனை அடுத்து இதுகுறித்த விசாரணை அறிக்கையை பிப்ரவரி 4-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது
சின்னத்திரை நடிகை சித்ரா கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்த நிலையில் தற்போது நிபுணர் குழுவின் அறிக்கையில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது