போலீஸ் விரட்டியதால் குளத்தில் விழுந்து சிலம்பரசன் உயிரிழந்தார்!

சிலம்பரசன் மரணம் சந்தேகமாக உள்ளதாகக் எண்ணி அதனை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி அவரின் தாய் வழக்கு!
 
போலீஸ் விரட்டியதால் குளத்தில் விழுந்து சிலம்பரசன் உயிரிழந்தார்!

தமிழகத்தில் 100 என்று அழைத்தால் உடனே பிரச்சனை தீர்க்க வந்து விடுவார்கள் காவல்துறையினர். மேலும் பல பகுதிகளில் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்று கூறினார். மேலும் அவர்களின் கூற்றுக்கு ஏற்ப நண்பராகவும்  னர். மேலும் பல பகுதிகளில் உதவும் குணம் உள்ள போலீசாரின் நற்செயல்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. இதனால் மக்கள் மனதில் போலீசார் குறித்த ஐயம் நம்பிக்கையும் மிகவும் எழுந்துள்ளது. எனினும் ஒரு சில பகுதிகளில் போலீசார் கண்முன்னே அசம்பாவிதங்கள்தெரிகிறது. மேலும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமும் தெரிகிறது.death

இந்நிலையில் போலீசார் துரத்தி அதனால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன்படி போலீசார் விரட்டி கும்பகோணம் சத்திரம் குளத்தில் விழுந்து சிலம்பரசன் என்பவர் தனது உயிரை இழந்தார். இதனால் இவரின் குடும்பம் மிகுந்த வருத்தத்தில் உள்ளது. இந்நிலையில் இவரின் தாய் தற்போது இவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி சந்தேகத்திற்கிடமாக இறந்தவரின் வழக்கு விசாரணை குறித்து சிபிசிஐடி   பதில் மனு தாக்கல் செய்ய ஆணை.

மேலும் மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மகனின் தாய் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் காவல்துறை சிலம்பரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து எனது கணவரிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்கியுள்ளனர் என்றும் சிலம்பரசனின் தாய் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலம்பரசனின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியுள்ளார். மேலும் மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன் வழக்கு குறித்து சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

From around the web