கள்ளக்காதல் விவகாரம்: மளிகை கடை ஊழியரை கொலை செய்த பிரபல ஜோதிடர்

கள்ளக்காதல் விவகாரம் காரணமாக மளிகை கடை ஊழியர் ஒருவரை பிரபல ஜோதிடர் ஒருவர் கொலை செய்து அந்தப் பிணத்தை கோயில் வளாகத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி என்ற பகுதியில் கண்ணதாசன் என்பவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மஞ்சுளா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பிரபல ஜோதிடர் கோபிநாத் என்பவர் தனது நண்பர் திருப்பதி மற்றும் கள்ளக்காதலி மஞ்சுளாவின் உதவியுடன் கண்ணதாசனை
 

கள்ளக்காதல் விவகாரம்: மளிகை கடை ஊழியரை கொலை செய்த பிரபல ஜோதிடர்

கள்ளக்காதல் விவகாரம் காரணமாக மளிகை கடை ஊழியர் ஒருவரை பிரபல ஜோதிடர் ஒருவர் கொலை செய்து அந்தப் பிணத்தை கோயில் வளாகத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி என்ற பகுதியில் கண்ணதாசன் என்பவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மஞ்சுளா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பிரபல ஜோதிடர் கோபிநாத் என்பவர் தனது நண்பர் திருப்பதி மற்றும் கள்ளக்காதலி மஞ்சுளாவின் உதவியுடன் கண்ணதாசனை கொலை செய்து அவரது பிணத்தை கோவில் வளாகத்தில் புதைத்து வைத்ததாக தெரிகிறது

கண்ணதாசனை காணவில்லை என அவருடைய உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த போலீசார் கண்ணதாசன் கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்

இதனை அடுத்து ஜோதிடர் கோபிநாத், அவருடைய நண்பர் திருப்பதி, கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web