தேர்தலில் துப்பாக்கி சூடு! மர்ம நபர்கள் அட்டகாசம்!இரண்டு வீரர்கள் காயம்!

சட்டமன்றத்தேர்தல் தமிழகம் மட்டுமின்றி ஒருசில மாநிலங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள்.தமிழகம் மட்டுமின்றி அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது ஆட்சியில் உள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. கட்சியானது கடந்த 2 சட்டமன்றத் தேர்தலில் வென்று 10 ஆண்டுகளாக மேற்குவங்கத்தில் ஆட்சியில் உள்ளது.

இக்கட்சியின் சார்பில் மம்தா பானர்ஜி முதல்வர் வேட்பாளராக அவர் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு காலில் படுகாயமடைந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தலானது 8 கட்டமாக நடைபெறும். அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்றையதினம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 30 தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுவது.
நிலையில் பகவான்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்காளர் சிலர் அச்சுறுத்த பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் இரண்டு பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.