பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் சென்செக்ஸ் 1600 புள்ளிகள் குறைந்ததால் அதிர்ச்சி

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி மாதம் 40 ஆயிரத்துக்கும் மேல் சென்செக்ஸ் இருந்தது இந்த நிலையில் இரண்டே மாதங்களில் 6000 புள்ளிகள் குறைந்து அதிரடியாக 36 ஆயிரத்திற்கு கீழ் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் ஆகி உள்ளனர் அதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயைத் தொட்டு உள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு ஆட்டம் கண்டுள்ளது. மேலும் எஸ் வங்கி உள்பட பல வங்கிகள் நஷ்டம் அடைந்துள்ளதும், உலகப் பொருளாதாரத்தையே
 
பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் சென்செக்ஸ் 1600 புள்ளிகள் குறைந்ததால் அதிர்ச்சி

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி மாதம் 40 ஆயிரத்துக்கும் மேல் சென்செக்ஸ் இருந்தது இந்த நிலையில் இரண்டே மாதங்களில் 6000 புள்ளிகள் குறைந்து அதிரடியாக 36 ஆயிரத்திற்கு கீழ் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் ஆகி உள்ளனர்

அதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயைத் தொட்டு உள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு ஆட்டம் கண்டுள்ளது. மேலும் எஸ் வங்கி உள்பட பல வங்கிகள் நஷ்டம் அடைந்துள்ளதும், உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் கொரோனாவும் இன்றைய பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.

தற்போது சென்செக்ஸ் 35615 என்றும் நிஃப்டி 10,418 என்றும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கச்சா எண்ணெயின் விலையும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web