கடும் தட்டுப்பாடு; விலை உயர்வு! "இனி பதுக்கல் கிடையாது!; பதுக்கல் தடுப்பு நடவடிக்கை!!"

இலங்கையில் பதுக்கல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் 
 
rice

தற்போது உலகத்திற்கே ஆச்சரியத்தை கொடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏனென்றால் தற்போது இந்தியாவிற்கும் அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு அருகாமையில் உள்ள தீவு நாடான இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி நிலவுவதாகவும் உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும் தகவல். மேலும் அங்கு அரிசி பருப்பு பால் பவுடர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து விற்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக மஞ்சளானது கிலோ ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது பலருக்கும்  தவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.rajpaksha

இந்த நிலையில் தற்போது இலங்கையில் பதுக்கல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். அதன்படி இலங்கையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததுடன் கடும் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் வருவதை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அத்தியாவசிய பொருட்கள் துறை ஆணையராக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது. இலங்கை அரசு மேலும் வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்ய ஆணையருக்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவிப்பு வெளியாகிறது பதுக்கல் பொருட்களை கைப்பற்றி அரசு நிர்ணயித்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. டாலருக்கு நிகராக இலங்கை ரூபாய் மதிப்பு 7.5 சதவீதத்திற்கு மேல் மிகவும் சரிந்து விட்டது.

இலங்கையின் அந்நிய செலவாணி கையிருப்பு இரண்டாண்டுகளில் 750 கோடி டாலரிலிருந்து 250 கோடி டாலராக சரிந்துவிட்டது குறிப்பிடதக்கது. இலங்கையில் பணவீக்கம் அதிகரித்து ரூபாய் மதிப்பின் சாய்ந்து விட்டதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து விட்டது. நெருக்கடி முற்றியது அடுத்து இலங்கையில் பொருளாதார அவசர நிலையை அறிவித்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்ச.

From around the web