நீர் மோர் பந்தல்கள் அமைத்திடுக! அதிமுக தலைமை ஆணை!

அரசின் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது.அந்த 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகமாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சிகளுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சியினை வைத்துள்ளது.

eps ops

அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தலும் நடைபெற்றது. மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் தனது தொகுதியில் தாக்கல் செய்திருந்தார். தமிழகத்தில் வெயிலின் தாக்கமானது அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கமானது உச்சத்தில் உள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் ,நீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து அதிமுக தலைமை ஆணையிட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகரிக்கும் நிலையில் முககவசம் டைசர் உள்ளிட்டவையும் வழங்கவும் அதிமுக தலைமையானது வலியுறுத்தியது. மேலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தவும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மேலும் தமிழக அரசானது நேற்றைய தினம்  கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web