"செப்டம்பர் 11 மகாகவி நாள்"-முதலமைச்சர் அறிவிப்பு!!

செப்டம்பர் 11 ஆம் தேதி மகாகவி பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
 
bharathiyar

இந்திய சுதந்திரத்திற்கு முன் பல்வேறு கவிஞர்கள் வாழ்ந்தனர். மேலும் அவர்கள் தேசப்பற்றுடன் காணப்பட்டனர். மேலும் அவர்கள் தங்களது நூல்களின் வாயிலாக அவர்களுக்கு வன்மையாக கண்டித்து எச்சரித்தனர். அவர்களின் நம் தமிழகத்தில் மகாகவி என்ற பெருமை பெற்றவர் பாரதியார். எட்டையபுர சேர்ந்தவர். இந்த நிலையில் நாளைய தினம் இவருக்கு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.bharathiyar

நினைவு நாளை ஒட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த படி செப்டம்பர் 11ம் தேதி பாரதி நினைவு நாளான அன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். பாரதி  பாடல்களை தொகுத்து "மனதில் உறுதி வேண்டும்" என்ற புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாரதி பற்றி ஆய்வு செய்த எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் விருது, சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மூத்த ஆய்வாளர் விசுவநாதன், மணிகண்டன் ஆகியோருக்கு நிதி விருது பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் பாரதி உருவப்படம் பொறித்த கலைப்பொருட்கள் பூம்புகார் நிறுவனம் மூலம் குறைந்த விலையில் விற்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாரதியியல் என்ற பெயரில் பாரதியாரின் நூல்கள் அவர் பற்றிய ஆய்வுகள் தொகுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் தொகுக்கப்படும்  நூல்கள் பாரதியார் நினைவு இல்லங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூலகத்தில் வைக்கப்படும் என்றும் அறியப்படுகிறது. பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் உலக தமிழ்ச் சங்கங்களை இணைத்து பாரதி குறித்த நிகழ்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியின் பாடல் காட்சிகளைத் திரையில் பாரதி பெயரில் காட்சி படுத்த படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு ஓராண்டுக்கு அவரது நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web