செப். 30 வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது: உரிமையாளர்கள் முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் செப்டம்பர் 1 முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன என்பதும் நாளை முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயங்க தொடங்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுடைய ஐந்து கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

இருப்பினும் தற்போது பேருந்துகள் ஓட தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லை என்று கூறப்படுவதால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரிய அளவில் லாபம் கிடைக்காது என்பதால் ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்கள் விரும்பவில்லை என்றும் செப்டம்பர் 30 க்கு பின்னர் நிலைமை ஓரளவு சீரானதும் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web