இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை முடிக்க காலக்கெடு விதித்த யூஜிசி: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து பாடங்களுக்கும் பாஸ் போடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதும் ஒரு சிலர் முதல்வருக்கு கட்டவுட் மற்றும் போஸ்டர்
 

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை முடிக்க காலக்கெடு விதித்த யூஜிசி: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து பாடங்களுக்கும் பாஸ் போடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதும் ஒரு சிலர் முதல்வருக்கு கட்டவுட் மற்றும் போஸ்டர் அடித்து தங்களது நன்றியை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் ஆலோசனை செய்து வருகின்றன. இந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படியும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு என்ற யூஜிசி உத்தரவிட்டுள்ளது

இதனால் இந்த மாதத்துக்குள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web