திறந்து விடப்படும் செம்பரம்பாக்கம் ஏரி: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 

 
திறந்து விடப்படும் செம்பரம்பாக்கம் ஏரி: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டி விட்டது 

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் மிக வேகமாக கடந்த சில நாட்களாக நீர்வரத்து இருந்ததால் தற்போது 22 அடியை எட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடியை எட்டியதும் அந்த ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 22 அடியை விரைவில் எட்டவுள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது

lake

குறிப்பாக அடையாறு ஆறு இருக்கும் நத்தம் குன்றத்தூர் திருநீர்மலை வழுதலம்பெடு திருமுடிவாக்கம், சிறுகானத்தூர், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் 22 அடியை செம்பரபாக்கம் ஏரி எட்டும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

From around the web