இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு! – ஜெயக்குமார்

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு, உரிய விளக்கம் அளிக்கின்றனர். மேலும் புதிய அறிவிப்புகளையும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் போது, எங்கள் தொகுதியில் வண்ண மீன் விற்பனை மையம் அமைக்கப்படுமா என்று சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ பாண்டியன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். வண்ண மீன்கள் வளர்ப்பு என்பது
 
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு! - ஜெயக்குமார்

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு, உரிய விளக்கம் அளிக்கின்றனர். 

மேலும் புதிய அறிவிப்புகளையும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் போது, எங்கள் தொகுதியில் வண்ண மீன் விற்பனை மையம் அமைக்கப்படுமா என்று சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ பாண்டியன் கேள்வி எழுப்பினார். 

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு! – ஜெயக்குமார்இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். வண்ண மீன்கள் வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழில். சர்வதேச அளவில் 125 நாடுகளில் வண்ண மீன்கள் ஏற்றுமதி நடக்கிறது. 

நமது நாட்டில் ரூ.300 கோடி அளவிற்கு அலங்கார மீன்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், தனியார் நிறுவனங்கள் அலங்கார மீன் வளர்ப்பு தொழிலுக்கு வந்தால் தமிழக அரசு ஊக்கம் அளிக்கும். 

இது சுய வேலைவாய்ப்பு அடிப்படையில் இளைஞர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.  இதனால் இளைஞர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web