திமுகவிற்கு அதிமுக மாற்று அல்ல பிரச்சாரத்தில் சீமான்!

திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த கூட்டணி கட்சிகள் மத்தியில் எந்த ஒரு கூட்டணியும் இன்றி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்தது நாம்தமிழர்கட்சி. மேலும்  இதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

ntk

மேலும் அக்கட்சியில் 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் சட்டமன்ற தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும்,  சீமான் பல பகுதிகளில் சென்று தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு  வருகிறார்.அவர் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவர் கூறினார் டென்மார்க் நிர்வாகத்தை நாங்கள் தருவோம் பரப்புரை அவர் கூறினார். மேலும் திமுகவிற்கு அதிமுக மாற்றல்ல எனவும்  இரண்டு கட்சித் தலைவர்கள் பெயரிலும் மதுபான ஆலைகள் உள்ளது எனவும் பரப்புரையில் சீமான் கூறினார். மேலும் இரு கட்சிகளும் மாறி மாறி வாய்ப்பு வழங்குவது மாற்று அல்ல என்றும் அவர் கூறினார்.

From around the web