மம்தா பானர்ஜி தொகுதி உட்பட 34 தொகுதிகளில் பாதுகாப்போடு வாக்குப் பதிவு!

மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது!
 
மம்தா பானர்ஜி தொகுதி உட்பட 34 தொகுதிகளில் பாதுகாப்போடு வாக்குப் பதிவு!

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. ஆறாம் தேதி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மிகவும் கண்காணிப்பு மத்தியில் கவனமாக பாதுகாக்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்  தமிழகம் புதுச்சேரி கேரளா மட்டுமின்றி மேற்கு வங்கத்திலும் நடைபெற்றது.mamata bannerji

மேற்கு வங்கத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற வில்லை. மேற்குவங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தற்போது வரை 6 கட்டமாக வாக்குபதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏழாம் கட்டமாக பதிவானது இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. மேலும் 7 கட்ட வாக்குப் பதிவில் முப்பத்தி நான்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் வாக்காளர் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் தங்களது வாக்கினை பதிவு செய்ய வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த 34 தொகுதிகளில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் இரண்டு முறை வெற்றி பெற்று பத்தாண்டுகளாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அங்கு ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளிக்குப்பின்பற்றியும் தங்களது ஜனநாயக கடமையை பணியாற்றுகின்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மம்தா பானர்ஜியின் கால்களில் மர்மநபர்கள் தாக்கினார்கள் என்பதும் அவர் அமர்ந்தபடியே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web