ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கூறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. குறிப்பாக தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக உடன் கூட்டணியாக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து தேர்தலை சந்தித்தன.மதிமுக கூட்டணி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.மதிமுகவிற்கு திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் குறிப்பாக மதுரை தெற்கு தொகுதியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.மதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார் வைகோ.

sterlite

அவர் தேர்தலின் போது தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மேலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு பிரச்சினைக்காக குரல் கொடுத்துள்ளார். அதன்படி மத்திய அரசின் சார்பில் ஆக்சிசன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு , தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அதன்படி அவர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். அவர் இந்தியாவில் ஆக்சிசன்  தட்டுப்பாடு இல்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மக்கள் நலவாழ்வு அமைச்சரும், செயலாளரும் தெளிவுபடுத்தி உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி கூறியுள்ளார் .மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதிகள் தான் தேவை என்றும் அவர் கூறினார். மேலும் கொரோனா சூழலை பயன்படுத்தி ஆக்சிசன் தருகிறோம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயங்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு இடம் கொடுக்கக் கூடாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

From around the web