இரண்டாவது ஊசி போட்டும் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட போலீஸ்!

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் பாதிப்பினால் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!
 
இரண்டாவது ஊசி போட்டும் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட போலீஸ்!

மக்கள் மத்தியில் எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைதான் தற்போது நிலவுகிறது. இந்த கூற்றுக்கு ஏற்ப எங்கு சென்றாலும் கொரோனா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் வெளியே செல்லும் போது கூட மிகவும் கண்காணிப்புடன் கவனத்துடனும் செல்கின்றனர். இவ்வளவு பாதுகாப்பாக சென்றாலும் ஒருசிலருக்கு கொரோனா கண்டறியப்பட்டு அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தின் சார்பில் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் சில தினங்கள் முன்பாக விதிக்கப்பட்டன.

covid 19

இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் போன்றோருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது இந்தியாவில் முன்னதாக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்டு மூன்றாவது தடுப்பூசி நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டும் காவலர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கொரோனா அறிகுறி உள்ளதால் தற்போது அவர் தனிமைப் படுத்திக் கொண்டார். மேலும் இவர் கொரோனா தடுப்பூசி காண இரண்டு முறை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டும் அவருக்கு கொரோனா இருந்தால் அவர் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டும் அவருக்கு கண்டறியப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது,

From around the web