கொரோனாவால் குணம் அடைந்தவர்களுக்கு புதிய சிக்கல்: வூகானில் அதிர்ச்சித் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக வெளி வந்திருக்கும் செய்தியைப் பார்த்து வருகிறோம் இந்த நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90 சதவீதம் பேருக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதாம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 500 பேரின் அன்றாட
 

கொரோனாவால் குணம் அடைந்தவர்களுக்கு புதிய சிக்கல்: வூகானில் அதிர்ச்சித் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக வெளி வந்திருக்கும் செய்தியைப் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90 சதவீதம் பேருக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதாம்

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 500 பேரின் அன்றாட நடவடிக்கைகளை சீனாவின் குழு ஒன்று ஆய்வு செய்து வந்தது. இதில் 90% பேருக்கு மூச்சு விடக்கூட சிரமமாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியுடன்தான் பலர் மூச்சு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மற்றொரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

From around the web