ஒரே ஒரு சிறுவனை தத்தெடுக்க 5000 பேர் போட்டி: ஏன் தெரியுமா?

9 வயது சிறுவனை தத்து எடுக்க ஒரே நேரத்தில் 5000 பேர் போட்டி போட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் ஒக்லஹோமா என்ற பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஜோர்டானும் அவருடைய சகோதரரும் எதிர்பாராத வகையில் திடீரென பெற்றோரை இழந்து விட்டனர். இந்த நிலையில் இருவரும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தனியார் காப்பகம் ஒன்றி முயற்சியால் அந்த ஜோர்டானின் சகோதரனை ஒரு தம்பதியர் தத்தெடுத்துக் கொண்டனர். அதனை அடுத்து ஜோர்டான்
 

ஒரே ஒரு சிறுவனை தத்தெடுக்க 5000 பேர் போட்டி: ஏன் தெரியுமா?

9 வயது சிறுவனை தத்து எடுக்க ஒரே நேரத்தில் 5000 பேர் போட்டி போட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் ஒக்லஹோமா என்ற பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஜோர்டானும் அவருடைய சகோதரரும் எதிர்பாராத வகையில் திடீரென பெற்றோரை இழந்து விட்டனர். இந்த நிலையில் இருவரும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தனியார் காப்பகம் ஒன்றி முயற்சியால் அந்த ஜோர்டானின் சகோதரனை ஒரு தம்பதியர் தத்தெடுத்துக் கொண்டனர். அதனை அடுத்து ஜோர்டான் தனிமையில் வாடியதாக தெரிகிறது

இந்த நிலையில் உள்ளூரைச் சேர்ந்த தனியார் டிவி ஒன்றிற்கு ஜோர்டான் பேட்டி கொடுத்தான். அப்போது தனக்கு ஒரு அம்மா அப்பா வேண்டும் என்றும் தான் தனிமையில் வாடுவதாகவும், பேசிக் கொண்டிருக்காவது ஒரு குடும்பம் தனக்கு வேண்டும் என்றும் ஏக்கத்துடன் கூறியுள்ளான்

இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் உள்ள தாய்மார்கள் தங்கள் தாய் பாசத்தை பொழிய ஆரம்பித்துவிட்டனர். இதனையடுத்து ஜோர்டான் என்ற சிறுவனை தத்தெடுக்க சுமார் 5000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த 5 ஆயிரம் பேரில் யாருடன் ஜோர்டான் செல்லப் போகிறான் என்பதே தற்போது பெரும் கேள்வியாக உள்ளது ரூபாய்

From around the web