இறைச்சி கடைகளுக்கு "சீல்"! எந்தெந்த மாவட்டங்களில் விதிமீறல்?

ஊரடங்கும் விதிமீறி இறைச்சி விற்ற கடைக்கு சீல் வைத்தனர் நகராட்சி ஊழியர்கள்!
 
chicken

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. காரணம் என்னவெனில் தற்போது தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அது எத்தகைய தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் முழு ஊடகங்களில் காய்கறி கடைகள் கூட விற்பனை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல தினசரிகாய்கறி கடைகள் போன்றவைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன மேலும் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு காய்கறிகள் பழங்களை வினியோகிக்க வியாபாரிகள் அனைவரும் வாகனங்கள் மூலம் வீடுதோறும் சென்று காய்கறிகள் விற்று வருகின்றனர்.fishstall

மேலும் அப்போது பழங்கள் விற்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஊரடங்கு காலத்தில் காய்கறி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இறைச்சிக் கடைகளும் தற்போது தமிழகத்தில் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில பகுதிகளில் திருட்டுத்தனமாக அவ்வப்போது இறைச்சிகள் விற்பனை செய்வதும் கண்டறியப்படுகிறது.  அப்போது அரசு அதிகாரிகள் சீல் வைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த ஊரடங்கு விதியை மீறி புதுக்கோட்டையில் இன்று செயல்பட்ட கோழிக்கறி கடைக்கு புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இதுபோன்ற கடைகள் இன்றைய தினம் பல பகுதிகளில் தெரியாமல் இங்கு வருபவர்கள் கண்டறியப்பட்டால்  சீல் வைத்து உள்ளது .இதை தொடர்ந்து தடையை மீறி மீன் வியாபாரம் செய்த அவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தற்போது மயிலாடுதுறையில் இந்த ஊரடங்கு காலகட்டத்தின் உத்தரவை மீறி மீன் வியாபாரம் செய்தவருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் என்ற எண்ணம் நம் தமிழகத்தில் அதிகமாக நிகழ்வதும் குறிப்பிடப்பட்டது. காரணம் என்னவெனில் இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அனைத்து கடைகளும் அரசுக்கு தெரியாமல் இயங்கி வருகின்றன இதை அரசு துல்லியமாக கண்டுபிடித்து சீல் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web