"தற்போது தற்காலிகம் ஆட்சிக்கு வந்தபின் நிரந்தரமாக சீல்!"-ஸ்டாலின்;

திமுக அரசு ஆட்சி அமைத்ததும் தற்காலிக அனுமதி காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக செய்து வைக்கப்படும்!
 
"தற்போது தற்காலிகம் ஆட்சிக்கு வந்தபின் நிரந்தரமாக சீல்!"-ஸ்டாலின்;

தமிழகத்தில் தற்போது வலிமையான எதிர்க்கட்சியாக காணப்படுகிறது திமுக கட்சி. திமுக கட்சியின் தற்போதைய தலைவராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்தது. ஆக்சிசன் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக நேற்றையதினம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சார்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.dmk

மேலும் அதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. மேலும் அதில் ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாத காலத்திற்கு ஆக்சிசன் தேவை அந்த ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்தனர். மேலும் இதில் திமுக பாஜக இடதுசாரிக் கட்சிகள் போன்று இருந்தன. தற்போது இதனை பற்றி திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார், திமுக அரசு ஆட்சி அமைத்ததும் தற்காலிக அனுமதி காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன் ஆக்சிசன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் உற்பத்தி ஆகும் ஆக்சிசனை தமிழகத்தின் தேவைக்கேற்ப பகிர்ந்து அளிக்கும் பொறுப்பை பிரதமர் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் மனிதாபிமான அடிப்படையில் ஸ்டெர்லைட்டை திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஒப்புக் கொண்டது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் மக்களுக்காக எந்த வகையிலும் இதனைப் பெற முடியுமோ அதற்கான ஒத்துழைப்பை திமுக வழங்கிக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web