இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைப்பு! காரணம் "ஊரடங்கு விதிமீறல்"

சிவகாசியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல் வைப்பு!
 
sivakasi

தற்போது நம் தமிழகத்தில் கொரோனாவின் காலம் என்றே கூறலாம். மேலும் இந்த காலகட்டத்தில் நம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. மேலும் திமுகவிற்கு இந்த ஆட்சியானது மிகவும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதனை சாதாரணமாக எண்ணிக்கொண்டு மிகவும் பொறுப்புடன் செயல்படுகிறார் நம் முதல்வர் முக ஸ்டாலின்.  இதனால் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தினை ஆட்சியின் ஆரம்பம் முதலே தக்க வைத்து வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.sivakasi

 இந்த நிலையில் தமிழகத்தில் 2 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் ஊரடங்கு நடைபெற்று வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.  இதனை மீறி பல்வேறு வாகன ஓட்டிகள் வெளியே செல்கின்றனர். அவரது வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது இந்த ஊரடங்கு விதியை மீறி ஆலை ஒன்று செயல்பட்டு உள்ளது, அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இச்சம்பவம் பட்டாசு உலகம் என்றழைக்கப்படும் சிவகாசியில் நடைபெற்றுள்ளது. அதன்படி சிவகாசியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆணையூர், போடுரெட்டியபட்டி யில் இயங்கிய இரண்டு பட்டாசு ஆலைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web